பெரியகுளம்: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை

1044பார்த்தது
பெரியகுளம் இரட்டை இலைக்கு துரோகம் செய்தவர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு.

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து நேற்று பெரியகுளத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக வேட்பாளர் மற்றும் அமமுக வேட்பாளர் இருவரையும் அடையாளம் காட்டிய இரட்டை இலை சின்னத்தை தோற்கடிக்க வேண்டும் என வேலை செய்வதாக தெரிவித்தார். எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி