இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர திமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.