தேனி மாவட்டம், பெரியகுளம் மக்கள் மன்றத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் இன்று(நவ. 25) சுப்பிரமணிய சாவடியில் மன்ற தலைவர் எம். ஏ இளங்கோவன் தலைமையில், துணைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மணி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியகுளம் நகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதித்தனர்.