லோயர்மேம்ப் அரசு பள்ளியில் கண்காணிப்பு குழுவின் ஆய்வு
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்பு குழு தேனி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் லில்லி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் காலத்தில் பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைப்பது தேவையான உணவு அடிப்படை வசதிகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது உத்தமபாளையம் கோட்டாட்சியர் தாட்சாயினி, உத்தமபாளையம் தாசில்தார் சுந்தர்லால், மற்றும் வருவாய்த்துறை சமூக நலத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.