ஆந்திராவில், மனைவியை சந்திக்க அரசு பேருந்தை மாமியார் வீட்டிற்கு ஓட்டி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஆத்மகூறு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து திடீர் மாயமாகி உள்ளது. இதையடுத்து, பேருந்தை காணவில்லை என ஓட்டுநர் அளித்த புகாரில் விசாரணையை தொடங்கிய போலீசார் காணாமல் போன பேருந்தை பாதி வழியில் மடக்கி பிடித்து அரசுப் பேருந்தை திருடிச் சென்றவரை கைது செய்தனர். அதிகாலையில் பேருந்து இல்லாததால், மனைவியை பார்க்கும் ஆசையில், அரசுப் பேருந்தை எடுத்து சென்றதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.