கூட்டாட்சி முறைக்கு வேட்டுவைக்கும் தீர்ப்பு - திருமாவளவன் காட்டம்!

343பார்த்தது
கூட்டாட்சி முறைக்கு  வேட்டுவைக்கும் தீர்ப்பு - திருமாவளவன் காட்டம்!
ஜம்மு காஷ்மீர் மாநில வழக்கில் கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை
மக்கள் மன்றம் புறந்தள்ளும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்பதைப் பற்றிய முக்கியமான சட்ட வினாவுக்கு உச்ச நீதிமன்றம் விடை அளிக்கவில்லை. மாறாக, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் என்று கூறியிருப்பது மிகப்பெரிய முரண்பாடாகும். நீதிமன்றத்தின் இந்த நிலைபாட்டை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.