ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட வெள்ளம்.. 68 பேர் பலி

52பார்த்தது
ஆப்கானிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு மாகாணமான கோரில் 50 பேரும், வடக்கு மாகாணமான ஃபரியாப்பில் 18 பேரும் சமீபத்திய வெள்ளத்தில் சிக்கி பலியானதாக தலிபான் அதிகாரிகள் கூறினர். இதனால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரு வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பல பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் உணவு வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் மாற்று வழிகளில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.