வழக்கு விசாரணையை தாமதிக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது

70பார்த்தது
வழக்கு விசாரணையை தாமதிக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில், இது சில நபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரம். ஆனால் இதனை நிறுவனங்களுடன் சம்மந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர். வழக்கின் விசாரணையை தாமத்தப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என்று வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிமன்றம், மே 6ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி