தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தாது என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மை கண்டறியும் அமைப்பு தான் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.