கலைஞர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர்!

84பார்த்தது
“காலம் உள்ளவரை கலைஞர்” என்ற நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க சார்பில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி தூர்கா ஸ்டாலினுடன் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு, நீலகிர எம்பி ஆ.ராசா, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: கலைஞர் செய்திகள்