சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 70 டாலராக தற்போது சரிந்துள்ளது. ஆனால், இன்று பெட்ரோல் விலை ரூ.100.85 ஆகவும், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கலால் வரி, செஸ் சர்சார்ஜ் என கூடுதல் வரிகளை விதித்து ரூ.28,33,000 கோடி கஜானாவை நிரப்பிக் கொண்டது பாஜக அரசு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.