ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய கேப்டன்

565பார்த்தது
ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய கேப்டன்
ஆஸ்திரேலிய மகளிரணி கிரிக்கெட் கேப்டன் மெக் லானிங் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். 13 ஆண்டுகளாக மகளிரணியின் கேப்டனாக இருக்கும் இவர், ரிக்கி பாண்டிங் (323), ஆலன் பார்டருக்கு (271) அடுத்து கேப்டனாக அதிக போட்டிகளில் (182) விளையாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இது கடினமான முடிவு தான். ஆனால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது" என கண்ணீர் ததும்ப உருக்கமாக தெரிவித்துள்ளார்.