தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

62பார்த்தது
தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர் ராஜ கோபால சுவாமிக்கு தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. தஞ்சை சுற்றுவட்டாரத்தில் இங்கு மட்டுமே
சக்கரத்தாழ்வார் மூலஸ்தானத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் அருளும் சக்கரத்தாழ்வாரை பிரதி புதன்கிழமை மற்றும் சித்திரை நட்சத்திரம் தோறும் வழிபடுவது சிறப்பாகும். பிரசித்திப்பெற்ற இந்த
கோயிலில் நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக ஸ்ரீசக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி