போராட்டம் காரணமாக மூடப்பட்ட மதுக்கடை

1092பார்த்தது
போராட்டம் காரணமாக மூடப்பட்ட மதுக்கடை
தஞ்சையில், 40 ஆண்டு காலமாக இயங்கி வந்த, பழைய பேருந்து நிலையம், மாட்டு மேஸ்திரி சந்து அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடை, இப்பகுதி பொதுமக்கள், வணிகர்கள், குடியிருப்புவாசிகள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்தது.  
எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வணிகர்கள் தொடர்  போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த 30ஆம் தேதியுடன் கடை மூடப்பட்டது.
டாஸ்மாக் கடை வாசலிலேயே மெடிக்கலும், அதில் பல மருத்துவர்கள் மருத்துவமும் பார்த்து வந்தனர். டாஸ்மாக் கடை வழியே தான் வீரராகவா பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. கடை அருகிலேயே கோவில், வணிகர்கள், குடியிருப்பு இருந்தது. இதன் வழியே பெண்கள் போவதற்கே அச்சப்படும் நிலை இருந்தது.  
கடந்த சில ஆண்டுகளுக்கு டாஸ்மாக் கடை முன்பு, கடுமையான கூட்டம் திரளுவதால் வணிகர்கள்
மிகவும் அல்லல்பட்டு வந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாட்டு மேஸ்திரி சந்து வணிகர்கள் கடந்த ஜூன் 28 ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து, டாஸ்மாக் மண்டல மேலாளர் பேச்சுவார்த்தையை நடத்தி, கடையை மூடுவதாக ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 31 இரவுடன் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

டேக்ஸ் :