காலை உணவுத்திட்டத்தின் கீழ் 56, 023  பேர் பயன் – ஆட்சியர்

69பார்த்தது
காலை உணவுத்திட்டத்தின் கீழ் 56, 023  பேர் பயன் – ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 23 பேர் பயன் பெறுவதாக 
மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது,  

தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான நல்வாழ்வுத் திட்டங்களின் வரிசையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நானிலம் போற்றும் திட்டமாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயிலும், 18. 5 லட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்து வருகிறார்கள்.

முதலமைச்சரின் நல்லாட்சியில் சீர்மிகு இத்திட்டத்தை ஏனைய பிற மாநிலங்கள் மட்டுமின்றி, அயல்நாடான கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வரலாற்றுச் சிறப்புகுரியதாகும்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், இத்திட்டத்தின் வாயிலாக 56, 023 மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர்" என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
இவ்வாறு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you