மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்தில் பேட்டரி ஆட்டோ தரப்படுமா?

52பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்தில் பேட்டரி ஆட்டோ தரப்படுமா?
பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஹாத்முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜலில்
முகைதீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை ஒன்றியத்தலைவர் அஷ்ரப் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செல்வராசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிக்காக வங்கி கடன் வழங்கப்படாமல் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகள்
அலைக்கழிக்கப்படுவதால் அந்த வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் புறக்கணிப்பது.
அதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்குவது. 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்
திறனாளிகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த அரசாணை எண் 151ஐ தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து தனது வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு அரசு மானியத்தில் பேட்டரி ஆட்டோ வழங்க வேண்டும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.