அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டம்

50பார்த்தது
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள இமாம் ஷாபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 50-ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி மற்றும் வாக்கத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாரத்தான் போட்டிக்கு 10 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டும், வாக்கத்தான் போட்டிக்கு 5 கிலோமீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, 44 வயதுக்குட்பட்டோர் பிரிவு என மாரத்தான் போட்டிக்கு வயது வரையறை செய்யப்பட்டிருந்தது. வாக்கத்தான் போட்டிக்கு 45-க்கும் மேல் வயது வரம்பு நிர்ணயம் செய்தும் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் இதுதவிர சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி