மாநில அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டி: பரிசளிப்பு விழா

84பார்த்தது
மாநில அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டி: பரிசளிப்பு விழா
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்ச ரும்,   திமுக மாநில இளைஞ ரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, பாவூர்சத்திரத்தில் பிலீவ் கிரிக்கெட் கிளப் சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட நபர்கள்  பங்குபெறும் மாநில அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவ பத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,   வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கும் கோப்பை மற்றும் பரிசுத் தொகை, நடுவர் மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில் கீழப்பாவூர் மேற்கு ஓன்றிய செயலாளர் க. சீனித் துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் , மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சங்கர்,   பொறியாளர் அணி கபில் தேவதாஸ் , முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்  வெள்ளத்துரை, வர்த்தக அணி பத்மநாபன் , இளைஞர் அணி நவீன்கிருஷ்ணா, நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகள கிரிக்கெட் கிளப் அமைப்பாளர்அருண், வழக்கறிஞர் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி