மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்க தலைவர் வாசுதேவநல்லூர் முருகன்  தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கீழப்பாவூர் அருணாசலம் மாவட்ட துணை தலைவர் குருவிகுளம் தர்மராஜ், மேலநீலிதநல்லூர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தென்காசி எம். முத்துசாமி வரவேற்றுப் பேசினார்.  தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதியவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், மற்றும் தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் துரைசிங், பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை முருகன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் மாடசாமி,   நெல்லை மண்டல செயலாளர் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்செல்வி  நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி