பாஜக மீது கனிமொழி எம்பி பகீர் குற்றச்சாட்டு

68பார்த்தது
தேர்தல் வாக்குறுதிகளை பா. ஜ. க. , நிறைவேற்றாது
கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம். பி. , நேற்று தென்காசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:

பாஜக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. அப்படிப்பட்ட பாஜகவுடன் சிலர் கூட்டணி வைத்து ஏமாந்து வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாத மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 68 ஆயிரம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்துள்ளார்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்டோர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களைப் பாஜக கொண்டு வந்த நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்தது அதிமுகதான். பாஜக - அதிமுக
இடையே ஒன்றுமில்லை எனத் தேர்தல் நாடகம் நடத்துகிறார் கள். அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழகியவர்கள், எதையும் ஸ்டிக்கர் ஒட்டாமல் தரமாட்டார்கள். அதேபோல பாஜக பெரிய ஸ்டிக்கர்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தார். அத்திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி மோடி வீடு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு முக்கால் பங்கு தொகையை நமது முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி