உணவுத்துறை அமைச்சருக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் நன்றி

62பார்த்தது
உணவுத்துறை அமைச்சருக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் நன்றி
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், முத்துகிருஷ்ண பேரியில் அமைந்துள்ள ரேசன் கடையில் அதிக கார்டுகள் இருந்த காரணத் தாலும், அனைத்து பொதுமக்களும் வந்து பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முத்துகிருஷ்ண பேரி கடையை பிரித்து கல்லூத்து மற்றும் அத்தியூத் தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்கப்பட்டது. இதையடுத்து முத்துகிருஷ்ண பேரியில் 3 நாட்களும், கல்லூத்தில் 2 நாட்களும், அத்தியூத்தில் ஒரு நாளும் ரேசன் கடை இயங்கி வந்தது. இந்நிலையில் 2 பகுதி நேர கடைகள் பிரித்த போதும், முத்துகிருஷ்ணபேரியில் 1200 குடும்ப அட்டைகள் இருப்பதால் 3 நாட்களுக்குள் பொருட்கள் வாங்க முடி யாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்தியராஜ் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் அடிப்படை யில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம், கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது  முத்துகிருஷ்ண பேரி நியாய விலை கடை 6 நாட்களும் கல்லூத்து நியாய விலை கடை முழு நேர கடையாக மாற்றி, அங்கு நான்கு நாட்களும் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கும் உணவுத்துறை அமைச்சருக் கும் முன்னாள் மாவட்ட செயலர் சிவபத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி