நடிகர்
விஜயகாந்த் கடந்த டிச 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழை தவிர வேறு எந்த மொழியிலேயும் நடிக்காத நடிகர் விஜயகாந்திற்கு மும்பையின் சாலையோரங்களில் இந்தி மொழியில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இதயப்பூர்வமான அஞ்சலி தமிழ் நடிகர் மற்றும் அரசியல்வாதி கேப்டன்
விஜயகாந்த் அவர்கள் வியாழன் 28 டிசம்பர் 2023 அன்று திடீரென காலமானார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் மனவேதனையுடன் மும்பை ரசிகர்கள் என எழுதப்பட்டுள்ளது.