ஆண்டுக்கு 50 லட்சம் கார் விற்பனையே டாடா-வின் இலக்கு

75பார்த்தது
ஆண்டுக்கு 50 லட்சம் கார் விற்பனையே டாடா-வின் இலக்கு
எதிர்வரும் சில ஆண்டுகளில் அதிகபேர் பயணிக்கும் வாகனங்களான பிவி-கார்கள், எஸ்யூவிகள், வேன்கள் ஆகியவை உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு 50 லட்சத்தைத் தாண்டும் என்று டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு 41 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. இதுகுறித்து டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது, “நாட்டில் ஆயிரம் பேருக்கு 30 வாகனங்கள் உள்ளன. இது சர்வதேச சராசரியை விட குறைவாக உள்ளது. வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், இதன் மீது கவனம் செலுத்தியுள்ளோம்” என்றார்.