நிமோனியா காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

1470பார்த்தது
நிமோனியா காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை
சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் கையிருப்பு, முகக்கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி