வாடிக்கையாளரின் லேப்டாப்பை திருடிச் சென்ற ஸ்விக்கி ஊழியர்!

82பார்த்தது
வாடிக்கையாளரின் லேப்டாப்பை திருடிச் சென்ற ஸ்விக்கி ஊழியர்!
ஹைதராபாதில் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு கொடுத்தனுப்பிய லேப்டாப்பை Swiggy Genie டெலிவரி ஊழியர் திருடிவிட்டதாக பெண் புகார். மேலும் லேப்டாப்பை திரும்பிக் கொடுக்க வேண்டுமென்றால் ரூ.15,000 தர வேண்டும் என மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்டரை பிக் அப் செய்த சிறிது நேரத்திலேயே செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டபோது ஊழியரின் விவரம் சரியாக தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். தனது நண்பரின் Login மூலம் இந்த நபர் ஆர்டரை பிக்அப் செய்தது தெரியவந்துள்ளது.