கிழக்கு சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அர்பாத் அணை உடைந்ததில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 30 பேர் பரிதாரபமாக உயிரிழந்தனர். மேலும், காணாமல் போன பல நூறு மக்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அர்பாத் அணை உடைந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.