புயல் பாதிப்பு : 7 ரயில்கள் ரத்து

75பார்த்தது
புயல் பாதிப்பு : 7 ரயில்கள் ரத்து
புயல் பாதிப்பு காரணமாக 7 ரயில்களை ரத்து செய்தும், 3 ரயில்களின் புறப்பாட்டில் மாற்றம் செய்தும் தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
புயல் பாதிப்புகளால் சென்னை வழியாக செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரு, மைசூர், ஜோலார்பேட்டை செல்லும் 3 ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலில் மாலை 3.30 மணிக்கு புறப்படவிருந்த ரயில் காட்பாடியில் மாலை 5 மணிக்கும், மைசூர் அதிவிரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.45க்கும், ஏலகிரி எக்ஸ்பிரஸ் அரக்கோணத்திலிருந்து மாலை 7.05 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி