சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆட்சியராகப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் , அவர்கள் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் முன்னிலையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்று, ”குழந்தைகளுக்கான நடைபயணம்” நிகழ்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கக்கூடிய குழந்தைகளின் நலனை போற்றிடும் வகையிலும், பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும், துறை ரீதியாக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அனதை்து பள்ளிகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்திடும் பொருட்டு, சிறப்புமிக்க போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.