சிவகங்கை அருகே உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண் மற்றும் பெண் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கை கால், ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், கை ஊனமுற்றோர், குள்ளமானோர் இரு கால்களும் ஊனமுற்றோர் பார்வையற்றோர் முற்றிலும் பார்வையற்றோர், இருகால்களும் ஊனமுற்றோர், பார்வையற்றோர், முற்றிலும் பார்வையற்றோர், மிக குறைந்த பார்வையற்றோர், காது கேளாதோர் பிரிவு ஆகிய பிரிவின் கீழ் 12 வயதிலிருந்து 17 வயது வரையிலான 50, 100, 200, 400 மீட்டர் ஓட்டங்கள் நீளம் தாண்டுதல் குண்டறிதல் 100 மீட்டர் சக்கரநாற்காலி , நின்று நீளம் தாண்டுதல், சாப்ட் பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.