தேர்தல் பத்திர வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட மறுத்த எஸ்பிஐ

55பார்த்தது
தேர்தல் பத்திர வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட மறுத்த எஸ்பிஐ
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் அதனை பணமாக்கும் செயல்முறை குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தெரிவிக்கக் கோரி அஞ்சலி பரத்வாஜ் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வணிக ரகசியங்களை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி