சேலம் எருமாபாளைத்தை சேர்ந்த இளங்கோவன் (51) என்பவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் அவரை தாக்கி சேலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.