மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மேயர், எம்எல்ஏ பங்கேற்பு

73பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மேயர், எம்எல்ஏ பங்கேற்பு
சேலம் மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட
சுபம் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை, தொழில் மையம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் பொது மக்கள் எளிதாக சான்றிதழ்கள் மற்றும் ஆணைகளை பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம். எல். ஏ. ஆகியோர்
பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தனர். முகாமில் மண்டல
தலைவர் அசோகன், பகுதி செயலாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் ஞானசேகர், ஜீவானந்தம், சீனிவாசன், முருகேஷ், கோபால், பகுதி துணைச்செயலாளர் ராஜசேகர்,
முன்னாள் கவுன்சிலர் சந்திரன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி