சேலம் வழியாக சென்ற கோவை-தன்பாத் ரெயில் 11. 20மணி நேரம் தாமதம்

66பார்த்தது
சேலம் வழியாக சென்ற கோவை-தன்பாத் ரெயில் 11. 20மணி நேரம் தாமதம்
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்-03326) நேற்று மதியம் 12. 55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால் மறுமார்க்கத்தில் இருந்து இணைப்பு ரெயில் வந்து சேராததால் அந்த ரெயில் 11. 20 மணி நேரம் தாமதமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12. 15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

தன்பாத் சிறப்பு ரெயில் 11. 20 மணி நேரம் தாமதமாக புறப்படுவதால் கோவை மட்டுமின்றி வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலத்தில் அந்த ரெயிலுக்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ரெயில் தாமதம் குறித்த அறிவிப்பு பயணிகளின் செல்போன் எண்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலர் அதனை பார்க்காமல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இணைப்பு ரெயில் வருவதற்கு ஏற்பட்ட தாமதத்தால் கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் 11. 20 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி