சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள பாலக்காடு பகுதி சேர்ந்தவர் நடேசன் மகன் ஆனந்த். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 560 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு உள்ளது. இதில் அவ்வழியாக சென்ற ஆட்டுக்குட்டி ஒன்று ஆறுதலை கிணற்றில் தவறி விழுந்தது. ஆட்டுக்குட்டி கத்துவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் கெங்கவள்ளி தீயணைப்பு துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்தபோது 20 அடி ஆழத்தில் ஆட்டுக்குட்டி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக கயிறு மற்றும் கொலுசு உதவியுடன் ஆட்டுக்குட்டியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.