எடப்பாடி அருகே ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கார் பறிமுதல்

64பார்த்தது
எடப்பாடி அருகே ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கார் பறிமுதல்
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் எடப்பாடி போலீசார் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமான முறையில் 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி ஒரு காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சம்பந்தப்பட்ட கிடங்கு எடப்பாடி தாவாந்தெரு பகுதியை சேர்ந்த பிரபு (வயது 40) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் தனது சகாக்களுடன் சேர்ந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்த எடப்பாடி போலீசார், தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி