அப்போது எதிர்ப்பு - தற்போது ஆட்டம்

58பார்த்தது
அப்போது எதிர்ப்பு - தற்போது ஆட்டம்
2020 ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிகானா, "ஏன் இது குறித்து யாரும் பேசாமல் இருக்கிறோம்" என பேசியிருந்தார். அப்போது, இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரபலங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். தற்போது, அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ள ரிகானாவுக்கு, அதே பிரபலங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய இசை நிகழ்ச்சியில், அவருடன் ஆடியும், பாடியும் மகிழ்ந்தனர். இதில் ரிகானாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரும் பேசியது குறிப்பிடத்தக்கது.