பிரதீப்க்கு ரெட் கார்டு.. கவின் ஆறுதல்

446பார்த்தது
பிரதீப்க்கு ரெட் கார்டு.. கவின் ஆறுதல்
நடிகர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். ரூல்ஸை முறையாக கடைபிடித்து கேமை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பரான கவின் தனது இன்ஸ்டா பக்கத்தில், "உன்னை தெரிந்தவர்களுக்கு, உன்னை நன்றாகவே தெரியும்" என ஆறுதல் கூறியுள்ளார். கவின் தவிர, பாவனி ரெட்டி உள்ளிட்ட பிரபலங்களும் ஆதரவாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.