ஆடி உற்சவத்தையொட்டி 1008 திருவிளக்கு பூஜை.!

52பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே டி. கிளியூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ 'நீலகாளியம்மன் கோவில்' ஆடி உற்சவ விழா கடந்த 22ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
     
விழாவின் ஒரு பகுதியாக இன்று கோவில் முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.

மேலும், வருகிற 30ம் தேதி செவ்வாய் கிழமை காவடி எடுத்தல் மற்றும் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி