பரமக்குடியில் வைகாசி உற்சவ பால்குட ஊர்வலம்.!

57பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிசக்தி ஶ்ரீராஜ ராஜேஸ்வரி, ஸ்ரீ சந்தன மாரியம்மன் சக்தி பீடத்தில் 16ஆம் ஆண்டு வைகாசி உற்சவ திருநாளை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார். அதனைத் தொடர்ந்து சக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

பால் குட ஊர்வலத்தில் குழந்தைகள் பக்தி பரவசத்துடன் பால்குடம் சுமந்து வந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது இறுதியாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி