கடல் சிப்பி கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.!

577பார்த்தது
கடல் சிப்பி கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.!
கடல் சிப்பி கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.


ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட வழங்குவது பெண்களுக்கு சுய தொழில் கற்றுத் தருவது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை பெண்களின் முன்னேற்றத்திற்காக செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிராமத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் 30 பெண்களுக்கு 50 நாட்கள் கடல் சிப்பி கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு பல்வேறு வகையான வண்ண கடல் சிப்பி கைவினை பொருட்களை செய்து மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தினர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் ரூப் சந்தர் கைவினை ஊக்குவிப்பு அலுவலர் பிரஜிஷா ராமநாதபுரம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் பெண்கள் நல அறக்கட்டளை நிறுவனர் கல்யாணி கார்த்திகேயன், ஆகியோர் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

டேக்ஸ் :