விளையாட்டு போட்டியில் பரமக்குடி வீரர்கள் சாதனை

81பார்த்தது
சென்னையில் கடந்த வாரம் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் பரமக்குடியை சேர்ந்த அசுகரன் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெறும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
அவர்களுக்கு இன்று அசுகரன் விளையாட்டு கழகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டது.

அசுகரன் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெறும் மாணவி சர்மிளா சென்னையில் உள்ள வைஷ்ணவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சோசியாலஜி பயின்று வருகிறார். பெண்கள் பிரிவில் குண்டு எறிதலில் 13. 87 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பெற்றார்.

அசுகரன் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெறும் இராமநாதபுரம் செய்து அம்மாள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி மதுமிதா கல்லூரி பிரிவுகளுக்கு இடையே பெண்கள் பிரிவில் குண்டு எறிதலில் 13. 23 மீ தூரம் எறிந்து மூன்றாம் இடம் பிடித்தார்.


மேலும் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அபிநவ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் கலந்து
கொண்டு 14. 26 மீ தூரம் எறிந்து இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

அவருக்கு பரமக்குடியில் அசுகரன் விளையாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

டேக்ஸ் :