ஸ்ரீபெரியமுத்தம்மன் பொங்கல் விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்.!

68பார்த்தது
ஸ்ரீபெரியமுத்தம்மன் பொங்கல் விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் ஸ்ரீபெரியமுத்தம்மன், ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு முன் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பிடிமண் பூஜையுடன் கொடி பட்டம் பெறப்பட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, அம்மனுக்க சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காப்புக் கட்டி, விரதத்தை தொடங்கி, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி