ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டும் போது சகோதரிகள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவது எப்படி என்றும் எப்போது எந்தநேரத்தில் கட்ட வேண்டும் என்றும் பார்க்க வேண்டும். பத்ர காலத்தில் ராவணனுக்கு ராக்கி கட்டிய சூர்ப்பனகையால், ராவணனின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. அதனால் ரக்ஷா பந்தன் அன்று ராக்கியை கட்டும் போது கால நேரம் பார்த்து கட்டுவது சிறப்பு.