தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 14) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் JJ கல்லூரி செவிலியர் மாணவிகள், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியை ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி KKC கல்லூரி வரை சென்று, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.