வேகத்தடை அமைக்க கோரிக்கை!

66பார்த்தது
வேகத்தடை அமைக்க கோரிக்கை!
கந்தர்வகோட்டை, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை சாலை பிரிவு வழியாக மதுரை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், தஞ்சாவூர், நாகை, திருச்சி, கறம்பக்குடி போன்ற ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. காந்தி சிலை அருகே உள்ள இச்சாலை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன், அரசு நடுநிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை போன்றவை இயங்கி வருகிறது.

பள்ளிக்கு மாணவ, மாணவிகள் இச்சாலையை கடந்து தான் செல்லும் நிலை உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளன. எனவே இச்சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொது மக்கள், வர்த்தகர்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி