மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ., 26) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முடியும் வரையும் மின்சாரம் இருக்காது. விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருப்பூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், கரூர், சென்னை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருவாரூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மின்தடை ஏற்படும்.