மகளிர் கடல் உணவுப் தயாரித்தல் குறித்து பயிற்சி

61பார்த்தது
மகளிர் கடல் உணவுப் தயாரித்தல் குறித்து பயிற்சி
காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி வங்கி நபார்டு ஆகியவை மூலம் 15 நாட்கள் மகளிர் கடல் உணவுப் பொருட்களை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான பயிற்சி வகுப்பு. பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் துவங்குவதற்கான பணியினை இன்று(செப்.12) காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்கள்.

இந்த பயிற்சியினை முடித்தவர்களுக்கு தொழில் துவங்க உள்ள நிலையில் பெண்கள் சுயமாக முன்னேற இது ஒரு உந்து கோலாக அமையும் எனவும் நன்றாக பயிற்சி முடித்து முன்னணி வங்கிகள் மூலம் இவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு பாராட்டுகளையும் துணை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

தொடர்புடைய செய்தி