காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் நேற்று (நவம்பர் 14) மாலை அன்னை இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடுவதில் ஒரு பகுதியாக வருகின்ற 21.11.2024 ஆம் தேதியை மகளிர் தினமாக கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறைகளையும் சேர்ந்த பெண் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.