பிரதமர் நரேந்திர மோடியும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் இணைந்து பிரான்சின் கடராச்சியில் உள்ள சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலையை (ITER) பார்வையிட்டனர். உலகின் மிகவும் லட்சிய இணைவு எரிசக்தி திட்டங்களில் ஒன்றான ITER-ஐ முதன்முறையாகப் பார்வையிட்டது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கது. ITER ஒரு பெரிய அளவிலான, கார்பன் இல்லாத எரிசக்தி மூலமாக இணைவை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை முன்னேற்றுவதற்கான இந்தியா மற்றும் பிரான்சின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.