திருச்சி விமான நிலைய புதிய முனையத்தினை திறந்து வைத்த பின்
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'என் இனிய தமிழ் குடும்ப உறவுகளுக்கு 2024 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பங்கேற்கும் இந்த ஆண்டின் முதல் பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடப்பதை பாக்கியமாக கருதுகிறேன். மறைந்த நடிகர்
விஜயகாந்த் சினிமாவில் மட்டும் கேப்டன் அல்ல அரசியலிலும் தான். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரை இழந்து வாடும் கட்சி தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.